கோவை பூ மார்க்கெட் அருகே டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே தேவாங்க பேட்டை வீதியைச் சேர்ந்தவர் பியூஸ் ஆர். டாடேடு. இவர் அதே பகுதியில் உள்ள 3

மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் டைல்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று (29-02-2024) காலை 9 மணியளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கடையில் இருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தெற்கு உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, நிலைய அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள கட்டிடங்களுக்கு தீ வராமல் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...