பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுபொருட்கள்: கோவை மாநகராட்சி நடத்தும் சிறப்பு கண்காட்சி நாளை துவக்கம்

கோவையில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை நுகர்வோர்கள் மற்றும் வணிகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் 'மை ஷாப்பிங், மை பேக்' என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. 



நாளை (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் ஆர்.எஸ்.புரம் மாநகராச்சி கலையரங்கத்தில் நடைபெற உள்ள இக்கண்காட்சியை கோவை மாநகரட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைக்கிறார். மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இக்கண்காட்சியை பார்வையிட எவ்வித கட்டணங்களும் செலுத்த தேவை இல்லை என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி குறித்து ராக் அமைப்பின் தலைவர் ரவீந்திரன் கூறியதாவது :- 

வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்கால் ஆன பைகள், குவளைகள், தட்டுகள் உள்ளட்ட பொருட்கள் ஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இவ்வாறான பொருட்கள் மண்ணில் மக்காமல் இருந்து நில வளத்தையும், நீர்வளத்தையும் கெடுக்கிறது. மேலும், மழைக் காலங்களில் சாக்கடைகளுக்குள் சிக்கும் பிளாஸ்டிக் பைகள் கழிவு நீர் வழிப் பாதையை அடைத்துவிடுகின்றன. இதனால் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுவிடுகிறது. 

இவை தவிர மேலும் பல்வேறு பிரச்சனைகள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படுகிறது. இதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை கோவைக்கு கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு ராக் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் சில ஆலோசனைகள் வழங்கின. அதன்படி நாளை மாற்றுப் பொருட்களுக்கான 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி நடைபெறுகிறது.



பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கோவையில் வரும் மே-1 ம் தேதி முதல் பிளாஸ்டிகால் தயாரிக்கப்படும் பைகள் மற்றும் தட்டுகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மாற்றுப் பொருட்களுக்கான தேவைகள் அதிகரிக்கும். அதன்படி, துணிப்பைகள், மரத்தாலான ஸ்பூன்கள், மட்டைத் தட்டுகள் மற்றும் நாரினால் செய்யப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இடம்பெறவுள்ளன. மேலும், இந்த பொருட்களை தயாரிப்பதற்கான இயந்திரங்களும் இதில் இடம் பெற உள்ளன. 



புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், இதுபோன்ற பொருட்களை விநியோகம் செய்ய நினைப்பவர்களுக்கும் 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...