கோவையில் டபுள் டக்கர் பஸ்ஸில் பயணம் செய்து ஆதரவற்ற குழந்தைகள் உற்சாகம்

ஆதரவற்ற 20 குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்றனர். வ.உ.சி மைதானத்தில் இருந்து காந்திபுரம் வரை அவர்கள் பயணம் செய்தனர். முதல் முறையாக டபுள் டக்கர் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.


கோவை: கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

8ம் தேதி இந்தப் பேருந்தில் முன்பதிவு செய்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். மேலும் தினமும் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பேருந்தில் பயணம் செய்வதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இன்று ஆதரவற்ற 20 குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்றனர்.



இவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து காந்திபுரம் வரை பயணம் செய்தனர்.



முதல் முறையாக டபுள் டக்கர் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இவர்களுக்கு கோவை விழா நிர்வாகிகள் சாக்லேட் குடுத்து மகிழ்வித்தனர்.



மேலும் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...