நூதன முறையில் வழிப்பறையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது - கூட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கோவை துணை ஆணையர் சண்முகம் பேட்டி

நூதன முறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறை தனிப்படை அமைத்து கைது செய்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு ஆயுதத்துடன் திரிந்த ஆறு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவையில் சமீபத்திய காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, குறிப்பாக இருபது வயதுக்கு குறைவான இளைஞர்களே அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள், இதனை தட்டி கேட்டுக்கும் நபர்களை ஆயுதம் கொண்டு கடுமையாக தாக்கி விட்டு தப்பி விடுகின்றனர், இதனால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் அச்சம் புகார் கூற அடைவதாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் கோவை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீளமேடு காவல் நிலைய சரகத்தின் கீழ் உள்ள தொட்டிபாளையம் பிரிவு அண்ணா நகர் அத்திக்குட்டை பிரிவில் வசித்து வரும் மூர்த்தி மகன் பாஸ்கர் (வயது 24), பீளமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஜூஸ் குடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் பள்ளி அருகே வந்த போது தன்னிடம் ஒரு நபர் லிப்ட் கேட்டார் அவரை ஏற்றிக்கொண்டு சின்னியம்பாளையம் சுடுகாட்டு பக்கம், அந்த நபரை இறக்கி விடும் போது, அங்கு மறைந்து இருந்த 5க்கும் மேற்பட்ட நபர்களுடன் சேர்ந்து லிப்ட் கேட்ட நபரும் சேர்ந்து பாஸ்கரை கட்டையால் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி பாஸ்கரனிடம் இருந்த ஒரு கிராம் தங்க கடுக்கன் வெள்ளி மோதிரம் பணம் ரூபாய் 5000 த்துடன், செல்போனையும் கூட்டாக கொள்ளையடித்து சென்றதாக புகார் கூறினார்,

அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்த நிலையில், குற்றவாளிகள் தொடர்ச்சியாக சூலூர் பகுதியில் இரவு டாக்ஸி டிரைவரான பிரசாந்த்யிடம் வாடகைக்கு வர அழைத்து சென்று வழியில் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 5000 மற்றும் மூன்று செல்போனை பறித்து சென்றாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக அதே குற்றவாளிகள் கோவை இருகூர் ராவத்தூர் பிரிவு முத்து கவுண்டன் புதூர் ரோடு ரயில் பாலம் அருகே வேலை முடித்து சென்ற அகில் மகன் ஹரிக்குமாரை (22) அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து கத்தியால் தலை, உடம்பில் தாக்கி காயப்படுத்தி இருசக்கர வாகனத்தை பறித்துகொண்டு தப்பி சென்றதாகவும், ரத்த காயத்துடன் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்து சிங்காநல்லூர் காவல் நிலைய புலனாய்வு பிரிவில் புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில் மூன்று கூட்டுக் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது.

ஒரே நபர்கள் என்பது புலனாய்வு பிரிவு க்கு என கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை தெற்கு துணை ஆணையர் சண்முகம் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் வினோத் குமார் கணேஷ்குமார் தமிழரசு உதவி ஆய்வாளர்கள் தனபால் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்கள் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்ததில், பீளமேடு அவினாசி சாலையில் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது எட்டு நபர்கள் என்றும்,அதில் இருவர் தப்பி ஓடி விட்டதாகவும், ஆறு நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து, ஒரு கிராம் தங்க கடுக்கன், வெள்ளி மோதிரம், மூன்று செல் போன், பணம் 5 ஆயிரத்தை கைப்பற்றினர்.

தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை, பீளமேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்கையில் கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய ஜெகன் என்ற நபரே கூட்டத்திற்கு தலைவனாக இருந்து செயல் பட்டது தெரிய வந்த நிலையில் தனிப்படை போலீசார், ஐந்து பிரிவுகளாக பிரிந்து தேடி வருகின்றனர், ஆறு நபர்களை பிடித்த தனிப்படை போலீசார், குற்றவாளிகளில், வினு, சோமசுந்தரம், யுவராஜ், மணி, சிவா, தயா, என்று விசாரணை தெரிய வந்துள்ளது, இதில் மணி, யுவராஜ் இரண்டு நபர்கள் 17 வயது உடைவர்கள் என்றும் தெரிய வருகிறது, இந்த சம்பவத்தால் கோவை மாநகர் பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...