வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு ஆய்வு

மழைக்காலங்களில் தக்காளியை தாக்கும் பூஞ்சாண மற்றும் பாக்டீரியல் நோய்களில் இருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்தினை உலக காய்கறிகள் மையம் கண்டறிந்துள்ளது. இத்தொழில்நுட்பம் குறித்த ஆய்வுத்திடல் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள மெட்டுபாவி கிராமத்தில், மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் உலகக் காய்கறிகள் மையம், தைவான் இணைந்து தாவர நல முனைப்பு நிதி உதவியுடன் தக்காளி மற்றும் அவரை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

பயிர்களில் தக்காளியை நோய் எதிர்ப்புத்திறன் உடைய கத்தரிரகத்தின் வேர்பகுதியுடன் இணைத்து ஒட்டுக்கட்டுவதன் மூலம் மழைக்காலங்களில் தக்காளியை தாக்கும் பூஞ்சாண மற்றும் பாக்டீரியல் நோய்களில் இருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்தினை உலக காய்கறிகள் மையம் கண்டறிந்துள்ளது. இத்தொழில்நுட்பம் குறித்த ஆய்வுத்திடல் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள மெட்டுபாவி கிராமத்தில், மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வுத்திடல் விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் பங்களிப்புடன் மதிப்பீடு செய்யும் நிகழ்வு கடந்த 06.11.2023 அன்று இராஜ் குமார், அவர்களது வயலில் நடைப்பெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக த்தின் பயிர்ப்பாதுகாப்பு மைய இயக்குநர் முனைவர் மூ.சாந்தி அவர்கள் தலைமையேற்று தலைமையுரையில் மழைக்காலங்களில் தக்காளிக்கு சிறந்த விலை கிடைக்கும் போதிலும், நோயின் பாதிப்பினால் விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.



மேலும், இந்த பாதிப்பினைக் குறைப்பதற்கு விவசாயிகள் அதிகளவில் பூஞ்சாணக் கொல்லிகளைத் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்புத் திறன் உள்ள ஒட்டுத் தக்காளியின் செயல் திறன் மற்றும் அதனை சார்ந்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தும்போது சிறந்த முறையில் நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும் என்றார்.

மேலும், அவர் விஞ்ஞானிகள் மட்டுமே ஆய்வின் செயல் திறனை மதிப்பீடு செய்யாமல், விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுடன் சேர்ந்து மதிப்பீடு செய்யும் போது ஒரு மித்த நம்பகத்தன்மையும் கூடும் என்று எடுத்துரைத்தார்.

கிணத்துக்கடவு வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குனர் ம.ஜமுனாதேவி அவர்கள் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றியும், வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மற்றும் மேற்கொண்ட இந்த அய்வுத்திடலின் பயன்களையும் விவசாயிகள் பின்பற்றி பயன்பெற வேண்டும் என்றார்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மா.முருகன் பேசுகையில் இத்திட்டதில் பின்பற்றப்பட்ட ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளையும் அவற்றின் முக்கியதுவத்தைப் பற்றியும் கூறினார். மேலும், பூச்சிச் கொல்லி எஞ்சிய நச்சில்லாத தக்காளி சாகுபடி உற்பத்தி குறித்தும் விளக்கம் அளித்தார்.

ஒட்டுதக்காளியின் நோய் எதிர்ப்பு திறனைப் பற்றியும் மற்றும் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையில் உயிர்ப்பூஞ்சாண கொல்லிகளின் உபயோகம் பற்றியும் நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் க.அங்கப்பன் அவர்கள் விளக்கம் அளித்தார்.தக்காளி விளைச்சலைப் பாதிக்கும் நச்சுயிரி நோய்களின் சேத அறிகுறிகள் மற்றும் அவற்றின் உயிரியல் முறை மேலாண்மை பற்றியும் நோயியல் துறை பேராசிரியர் முனைவர். கா.கார்த்திகேயன் அவர்கள் கூறினார்.

தாவர உயிர்த்தொழில் நுட்பவியல் விஞ்ஞானி முனைவர் நா.மணிகண்டபூபதி அவர்கள் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பில் உயிர் தொழில் நுட்பவியலின் பங்களிப்பை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பூச்சியியல் துறை இணை பேராசிரியர்கள் முனைவர் பா.ச.சண்முகம், முனைவர் தி.இளையபாரதி மற்றும் முனைவர் து.சீனிவாசன் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து நடத்தினர். கிணத்துக்கடவு பகுதியைச் சார்ந்த சுமார் 45 தக்காளி விவசாயிகள் மற்றும் 10 தோட்டக்கலை அலுவலர்கள் பங்கு பெற்று மதிப்பீடு செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...