கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வேலுச்சாமி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் தேவேந்திரகுல வீதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித் தொழிலாளியான இவர் திருமணமான நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலுச்சாமி வசித்து வந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை கவனித்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காநல்லூர் போலீசார், வீட்டிற்குள் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வேலுச்சாமி சடலமாக கிடந்ததை கண்டறிந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வேலுச்சாமி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

வேலுச்சாமியின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வேலுச்சாமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர் தலைமறைவாக உள்ளதாககவும் அந்த நபரைபோலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் சமீபத்தில் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பீளமேடு பகுதியில் நவீன், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதனும் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், வேலுச்சாமி கொலை இந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 5வது கொலை சம்பவமாக அமைந்துள்ளதால், அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Newsletter

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...