உடுமலை நகராட்சி 4-வது வார்டில் உள்ள பொது கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழப்பு

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


திருப்பூர்: பொதுக்கிணற்றில் மீன்கள் உயிரிழந்துள்ளது பற்றி சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள பொதுக் கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில் இன்று கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகின்றது.

பின்னர் கிணற்றை பார்த்த பொழுது 100க்கும் மேற்பட்ட மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா எனவும் மீன்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மாசடைந்த கிணற்று நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுக் கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...