மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்- பொதுமக்களிடம் கேட்டறிந்த கோவை ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, தார்சாலை பணிகள்‌ உள்ளிட்ட வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவு.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ குறிச்சி குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ‌ சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து,



அதன்‌ செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்து, பணியை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடாந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு வளாகத்தில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள்‌ கிருமிநாசினி தெளிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர்‌, வார்டு எண்‌.99க்குட்பட்ட வெள்ளலூர்‌ பகுதியிலுள்ள அற்புதம்‌ நகரில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, வார்டு எண்‌.990க்குட்பட்ட அற்புதம்‌ நகா்‌ பகுதியில்‌ (NSMT) நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ ரூ.46.33 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 1.54 கிலோ மீட்ட தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னா்‌, அற்புதம்‌ நகர்‌ மற்றும்‌ இந்திரா நகர்‌ பகுதிகளில்‌ வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம்‌ நேரில்‌ கேட்டறிந்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக வடவள்ளி மற்றும்‌ சோமையம்பாளையம்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையம்‌ அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத்தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ பிரரம்‌ ஆனந்த்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ தமிழ்ச்செல்வன்‌, உதவி பொறியாளாகள்‌ மதியழகன்‌, கீதாதேவி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள்‌ இளங்கோவன்‌, சுந்தாராஜன்‌, கனகராஜ்‌, உதவி பொறியாளா்கள்‌ சரண்யா, சபரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ஆண்டியப்பன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...