உடுமலையில் பள்ளி மாணவ மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகர் அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விளக்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு அமராவதி நகர் காவல் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்துசாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) M.S.மணிகண்டன் தலைமை தாங்கினார்.



இதில் சிறப்பு விருந்தினராக அமராவதி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I நெல்சன் அவர்கள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பில் என் பங்கு என்ற தலைப்பில் கருத்துகளை எடுத்துரைத்தார்.



இதில் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது அப்பள்ளியின் மாணவ மாணவிகள் இதில் பங்கு பெற்றார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...