மாநகராட்சி வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 8 வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசித்து வரும் பிரான்சிஸ் சேவியர், நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.11,010 மற்றும் வார்டு 84-ல் நாடார் தெருவில் வசித்து வரும் ராஜமாணிக்கம் நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.6,862 மற்றும் குடிநீர் கட்டணம் ரூ.27,740 ஆகியவை செலுத்தாததால் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, வார்டு 45-ல் கண்ணுசாமி கவுன்டர் தெருவில் வசிக்கும் சாந்தாமணி நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.15,753, வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசிக்கும் கே.பி.குஞ்ராமன் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.14,815, வார்டு 49-ல் பொங்கியம்மாள் தெருவில் வசிக்கும் மனோரஞ்சிதம் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.9,397 ஆகியவற்றை செலுத்தாததாலும், வார்டு 53-ல் தனலட்சுமி நகரில் வசிக்கும் என்.பழனிச்சாமி குடிநீர் கட்டணம் ரூ.8,489, வார்டு 53-ல் ஆவாரம்பாளையம் சாலையில் வசிக்கும் வேணுகோபால் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.4,366 மற்றும் வார்டு 54-ல் விவேகானந்தா சாலையில் வசிக்கும் சேமியல் நாடார் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.5,220 ஆகிய வரிதாரர்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கியும், வரிகள் செலுத்தாத காரணத்தினால் மேற்படி வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...