உதவி ஜெயிலர் பணிக்கான தேர்வு - கோவையில் விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதினர்!

தமிழக முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற உதவி ஜெயிலர் பணிக்கான எழுத்து தேர்வில் கோவை மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 45 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற ஜெயிலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உதவி ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்நடைபெற்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த தேர்வுக்காக 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அனைத்து மையங்களிலும் காலை ஒன்பது முப்பது மணி முதல் இந்தத் தேர்வானது இணையதளம் மூலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 40 முதல் 45 சதவீதம் வரையிலான தேர்வர்கள் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் டி.சி.எஸ் நிறுவனம் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...