கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை: திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி நயினாகரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32), கோவை துடியலூர் வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதியில் செயல்பட்டு வரும் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக லாரி டிரைவராகப் பணியாற்றி வருகிறார்.
அதே நிறுவனத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த ரவிகுமார் (40) என்பவரும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதியில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, நிறுவனத்தில் சம்பளம் வழங்குவது மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ரவிகுமார், மணிகண்டனை தாக்கியதுடன், அங்கிருந்த இரும்புக் கம்பியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் மணிகண்டனின் இடது கண், கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரவிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.