கோவை கிழக்கு மண்டலத்தில் தார்ச் சாலை, பள்ளி கட்டிட புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு!

கோ‌வை கிழக்கு மண்டலத்தில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பிட்டில்‌ நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.



கோவை: கோவை கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.6க்குட்பட்ட வீரியம்பாளையம்‌ முதல்‌ அன்னை பிள்ளையார்‌ கோவில்‌ வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.300 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌



கருப்பராயம் பாளையம்‌ மாநகராட்சி நடுநிலை பள்ளியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகளையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் நேரு நகா்‌ மாநகராட்சி பள்ளியில்‌ பழுதடைந்த கழிவறைகளை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌, கட்டுமான‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வீரியம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கல்பனா, அப்பகுதியில்‌ தார்‌ சாலை மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பிடு தயாரிக்க பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...