கோவை அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி - போலீஸ் விசாரணை!

கோவை இக்கரை போளூவாம்பட்டியில் உள்ள விவசாய தோட்ட கிணற்றில் சின்னதுரை என்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த இக்கரை போளூவாம்பட்டி, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது60).

இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மகன் சக்திவேல் தனியார் வங்கி மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னதுரை தனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுந்தரசாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

பின்னர் சுந்தரசாமி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், நீண்ட நேரமாக சின்னதுரை அவரது வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சுந்தரசாமியின் தோட்டத்தில் இருந்த சகுந்தலா என்பவர் கிணற்றில் பார்த்தபோது, சின்னசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்த, அவர் உடனடியாக ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சின்னதுரையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சின்னதுரையின் மகன் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...