உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி தலைவர் பதவி நீக்க கருத்து கேட்புக்கூட்டம் ஒத்திவைப்பு!

உடுமலை அருகேயுள்ள போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முறைகேட்டில் ஈடுபட்டதால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் போதியளவு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், வட்டாட்சியர் கண்ணாமணி கூட்டத்தை வருகின்ற 24ஆம் தேதி ஒத்திவைத்தார்.


திருப்பூர்: போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்செய்வது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் திமுகவை சேர்ந்த சௌந்தர்ராஜன், பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்திய நிலையில், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை என அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அவர் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி கருத்து கேட்புக் கூட்டம் இன்று போடிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், உடுமலை வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உடல்நிலை சரியில்லை எனக் கூறி கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வராத காரணத்தால் வருகின்ற 24ஆம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கருத்து கேட்புக் கூட்டத்திற்கு உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...