கோவையில் மனித-விலங்கு மோதலை தடுக்க 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்த முடிவு!

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பூச்சியூர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து தொடர்பான ஆட்சியர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் மனித - விலங்கு மோதலை தடுக்க 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பூச்சியூர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்தது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று, தடாகம் காப்புக்காட்டிற்கு வெளியே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கூடலூர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டா நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இன்று காலையில் சுமார் 25 வயதுடைய ஆண் யானை ஒன்று தலையை வைத்து உரசிய போது கம்பம் உடைந்து சரிந்ததில், மின் கம்பிகள் யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இந்நிகழ்வினை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

வனப்பகுதியை ஒட்டிய 1 கி.மீ. முதல் அதிகபட்சமாக 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரைப்படங்களில் வரையறுத்து அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து உடன் சரிசெய்தல்.

மேலும், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க வனங்களை ஒட்டிய பகுதிகளில் உயர் மின்கம்பங்கள் அமைத்தல், காப்பிடப்பட்ட மின்கம்பிகளை பயன்படுத்துதல், மின்கம்பங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற வழிமுறைகளை வகுத்து தொலைநோக்கு தொலைநோக்கு நடவடிக்கை மேற்கொள்வது.

வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின் வேலிகள் மற்றும் மின்கம்பிகள் ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுப்புலத்தணிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது மற்றும் மனித-வனவிலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பதை குறித்து வருவாய் வட்ட அளவில் வட்டாச்சியர், வனச்சரக அலுவலர், காவல் ஆய்வாளர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...