கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை பிரித்தெடுப்பு குறித்து அறிவுறுத்தினார். டெங்கு ஒழிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
Coimbatore: மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா அவர்கள் இன்று (10.08.2026) மத்திய மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு எண் 48-ல் அமைந்துள்ள காந்திபுரம், 100 அடி சாலை, 2வது வீதி, லட்சுமி நகர், Dr இராதாகிருஷ்ணன் சாலை ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆணையர் ஆய்வு செய்தார். தூய்மைப் பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
காந்திபுரம் 2வது வீதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். அப்பகுதி பொதுமக்களிடம் தண்ணீர் விநியோகம் முறையாக செய்யப்படுகிறதா என்பதையும், தெரு விளக்குகளில் ஏதேனும் பழுதுகள் உள்ளதா என்பதையும் நேரடியாக கேட்டறிந்தார். மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதே பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாகவும் ஆணையர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். டெங்கு கொசு புழு இருப்பிடங்களை நேரில் பார்வையிட்டு சரிபார்த்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் கணேசன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.