தென்னம்பாளையத்தில் திருப்பூர் மேற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் ஆய்வு - அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

தென்னம்பாளையம் அருகேயுள்ள டி.எம்.சி காலனியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாவிட்டால் சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் அருகே ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ செல்வராஜ், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பல்லடம் சாலை தென்னம்பாளையம் அடுத்த டி.எம்.சி காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதி குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து புகுந்தது.

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தூய்மை பணியாளர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக தெரிவித்தார்.



மேலும் ஊர் முழுவதும் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணிப்பது போல் தோன்றுவதாகவும் இதே நிலை நீடித்தால் அதிகாரிகளின் அலட்சிய போக்கு குறித்து சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

இனியும் இதுபோன்று குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...