கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயமடைந்த மேலாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட ஜியாவுல்ஹக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவையை அடுத்த குனியமுத்தூர் பி.கே. புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையில் சம்பளம் மற்றும் வருகைப் பதிவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மேலாளரின் கழுத்தை கத்தியால் அறுத்ததாகக் கூறப்படும் தொழிலாளியை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பி.கே. புதூர் பகுதியில் இயங்கி வரும் டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளிக்கடையில் கடந்த மூன்று மாதங்களாக மேலாளராக பணியாற்றி வருபவர் முகமது கபீர் (55). இவர் குனியமுத்தூர் அர்ச்சனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இதே கடையில் திருப்பூரைச் சேர்ந்த ஜியாவுல்ஹக் (55) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜியாவுல்ஹக்குக்கும், மேலாளர் முகமது கபீருக்கும் இடையே வருகைப் பதிவு மற்றும் சம்பளம் வழங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று கடைக்கு வந்த ஜியாவுல்ஹக், முகமது கபீரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜியாவுல்ஹக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது கபீரின் கழுத்தில் சரமாரியாக தாக்கியதாகவும், பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.



இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த முகமது கபீர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனிருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது கபீரின் மனைவி ஜீனத் (47) அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜியாவுல்ஹக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகப் புகார்: 10 தவெகவினர் மீது வழக்குப்பதிவு

செப் 24-ஆம் தேதி, தவெகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட 10 பேர், வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ஆய்வு நடத்...

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...