உடுமலை ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு

உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி சாலையில் ஊர்காவல்படை அலுவலகம் இயங்கி வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும், இந்த அலுவலகம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் இன்று அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை நகராட்சிக்கு கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்த ஊர்காவல்படை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. இரு தாலுகாவிலும், 60-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை உள்ள நிலையில், அவர்களுக்கான அலுவலகம், 20 ஆண்டுக்கும் மேலாக, நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு, மாதம்தோறும் ஊர்க்காவல் படையினருக்கு எஸ் பி அலுவலகத்திலிருந்து வாடகை தொகை மற்றும் செலவினங்களும் வழங்கப்படும். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வாடகைத் தொகை 6 ஆண்டாக வாடகை மற்றும் அலுவலக செலவினங்கள் நிதி ஒதுக்கபடாததால் வாடகை நிலுவை வைக்கப்பட்டது.



இதனால், நகராட்சி அதிகாரிகள் அலுவலகத்தை மூடி, 'சீல்' வைத்தனர். இதனால், ஊர்க்காவல் படை வீரர்கள் குறித்த ஆவணங்கள், உதவித்தொகைக்கான பில், ரசீதுகள் அனைத்தும் அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், மாதம் தோறும் ஊர்காவல் படையினருக்கு உதவித் தொகைக்கான பில் கூட எழுத முடியாமல், தவித்து வருகின்றனர்.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கான வாடகை, செலவினங்கள் ஒதுக்கீடு செய்யவும், ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களுக்குரிய மாத உதவிதொகை மற்றும் பணியாற்றிய காலத்திற்கான சிறப்பு தொகை வழங்க, எஸ்.பி., மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவல்படை வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...