கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), சனீப் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள பொது கழிப்பறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் திடீரென ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது அவர்கள் டைப்போல், நிட்ராஷிபாம் என போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட இருவரும் கோவை கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), உக்கடம் பகுதியை சேர்ந்த சனீப் (30) என்பதும் இவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...