முதல்வர் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தாராபுரம் நகர திமுக சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திமுக நகர இளைஞரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தாராபுரத்தில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் இன்று பிறந்த குழந்தைக்களுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு அன்புநிதி என பெயர் சூட்டி பரிசு பெட்டகம் மற்றும் குழந்தையின் அம்மாவிற்கு சேலை மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து 2வது வார்டில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இதையடுத்து, நஞ்சம்பாளையம் சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, சிலேடு, பென்சில், மரக்கன்றுகள் ஆகியவற்றை திமுக நகர அவைத் தலைவர் கதிரவன் மற்றும் நகர துணைத் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

தாராபுரத்தில் உள்ள 30 வார்டு பகுதிகளிலும் திமுக கொடிகள் ஏற்றப்பட்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...