பல்லடம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை - செய்தியாளர்களை கண்டதும் தெறித்து ஓடிய நபர்!

பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கள ஆய்வுக்கு சென்ற செய்தியாளர்களை கண்டதும் லாட்டரி சீட்டு விற்பனையாளர் தெறித்து ஓடியதால் பரபரப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடப்பதும், ஒரு நோட்டில் சில லாட்டரி எண்களை எழுதி வைத்துக் கொண்டு செல்போன் மூலமாக தகவல் தெரிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்த போது கடந்த 14ஆம் தேதியன்று பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியில் வந்த முத்துலிங்கம், மீண்டும் லாட்டரி விற்பனை செய்வதாக வீடியோ வெளியானதையடுத்து, பத்திரிகையாளர்கள் அந்த பகுதியில் கள ஆய்விற்கு சென்றனர்.



அப்போது பத்திரிகையாளர்களை கண்டவுடன் அங்கு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த முத்துலிங்கம், அவசர அவசரமாக வீட்டு கதவைப் பூட்டிவிட்டு செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட படியே தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வது போன்ற வீடியோக்கள் வெளியான பின்பும், அச்சம் இல்லாமல் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள முத்துலிங்கம் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...