உடுமலை அருகே திருமூர்த்திமலையில் சிவராத்திரி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை கோவிலில் சிவராத்திரியையொட்டி நேற்றிரவு முதல் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்துள்ள வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அங்கு மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, இரவு 8 மணி அளவில், முதல் கால பூஜைகளும், இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குறிப்பாக மங்கள இசை, பாட்டும் பரதமும், தேவராட்டம் கிராமிய நாட்டுப் புறக்கலை நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய, விடிய நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும், அதிகாலை 4 மணி அளவில் நான்காம் கால பூஜைகளும் நடைபெற்றது.



இதை தொடர்ந்து 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீப தரிசனம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு உடுமலையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பி்ல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.



இந்த நிகழ்வுக்கு உடுமலை, பொள்ளாச்சி, பழனி, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.



மேலும், கோவில் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தினர்.

இதனிடையே மகாசிவராத்திரியை முன்னிட்டு உடுமலை நகரில் உள்ள மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், போடிபட்டி முருகன் கோவில் சின்ன விநாயகர் கோவில் மற்றும் தில்லை நகர் ரத்ன லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...