கோவை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் - ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌, வளர்ச்சி திட்டப்பணிகள்‌ மற்றும்‌ வெள்ளலூர் குப்பை கிடங்கில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தார்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வாடு எண்‌.85-க்குட்பட்ட வெங்கடாசலபதி நகரில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌, மட்கும்‌ குப்பை மற்றும்‌ மட்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, குப்பைகளை மட்கும்‌ குப்பை, மட்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளரார்களை அறிவுறுத்தினார்.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.85-க்குட்பட்ட சில்வர்‌ ஜுப்லி வீதியில்‌ ரூ.18.70 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 320 மீட்டர் தொலைவிற்கு சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ மற்றும்‌ 250 மீட்டர் தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும் அவர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

பின்னர், கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ மட்கும்‌ குப்பைகள்‌, மட்காத குப்பைகள்‌ தரம்‌ பிரிக்கப்பட்டு, உரம்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கு பகுதியில்‌ மரக்கன்றுகள்‌ பராமரிக்கும்‌ இடத்தினையும்‌, குப்பை கழிவுகளை தரம்‌ பிரித்து பயோ மைனிங்‌ இயந்திரம்‌ மூலம்‌ உரம்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.9க்குட்பட்ட செட்டிபாளையம்‌ சாலை, போத்தனூர்‌ பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ சாலைப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார். பின்பு, குறிச்சி, குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக போத்தனூர்‌ நெடுஞ்சாலையில்‌ ரூ.442 கோடி மதிப்பீட்டில்‌ பாதாள சாக்கடை பணிகள்‌ நடைபெற்றுவருவதையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினா்‌ சரளா, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர்‌ ஆறுமுகம்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ எம்‌.மதியழகன்‌, உதவி ஆணையர்‌ (பொ) மாணிக்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள்‌ சரண்யா, சபரிராஜ்‌, ரவிக்கண்ணன்‌, சபரீசன்‌, சதீஷ்‌, மண்டல சுகாதார அலுவலா்‌ ஆண்டியப்பன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...