கோவை ஈஷாவில்‌ கோலாகலமாக தொடங்கிய 'யக்ஷா' கலை திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று (பிப்‌.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ ரமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதுதொடர்பாக ஈஷா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈஷாவின்‌ மஹாசிவராத்திரி விழா வரும்‌ 18ஆம்‌ தேதி மிக விமரிசையாகவும்‌, பிரம்மாண்டமாகவும்‌ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா இன்று மாலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சி கலாச்சாரம்‌, இசை மற்றும்‌ நடனத்தின்‌ செறிவை பறைசாற்றும்‌ விதமாக உலகப்புகழ்‌ பெற்ற கலைஞர்களைக்‌ கொண்டு நடத்தப்படுகிறது.



விழாவின்‌ தொடக்கமாக பண்டிட்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் அவரது,‌ அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும்‌ மெய்‌ மறக்கச்‌ செய்தது. உலகம்‌ முழுவதும்‌ இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ இந்த நிகழ்ச்சியை நேரில்‌ கண்டு களித்தனர்‌.

அகில இந்திய வானொலியில்‌ 'ஏ-டாப்‌' கிரேடு பெற்ற, 'கிரானா கரானா-வின்‌ ஒளி' என வர்ணிக்கப்படும்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டி, பண்டிட்‌. ஜஸ்ராஜ்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, யங்‌ மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, சண்முகானந்தா சங்கீத்‌ ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்‌ தொடர்ந்து நாளை (பிப்‌. 16) புல்லாங்குழல்‌ இசைக்கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சியும்‌, நாளை மறுநாள்‌ (பிப்‌. 17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள்‌ ஈஷாவில்‌ உள்ள சர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 7 மணி முதல்‌ 9 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...