கோவை அருகே இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து - இளம்பெண் உட்பட 2 பேர் படுகாயம்

கோவை துடியலூர் அருகே இளைஞர் ஓட்டிவந்த ஆடி கார், அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கேரளா மாநிலம் ஆனைகட்டி சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26) இவர் நேற்று தனது ஆடி காரை ஓட்டிக்கொண்டு வடமதுரையில் இருந்து பழனி கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றுள்ளார். அவருடன் துடியலூர் சேர்ந்த சையது முகமது (வயது30) கேரளா ஆனைகட்டி அகழி பகுதியைச் சேர்ந்த மிதுனியம் (வயது 27), ஆகியோரும் சென்றுள்ளனர்.



அதிவேகமாக சென்ற கார், பழனிகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அஜய் (வயது 29), என்பவர் மீது மோதி, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கோவை ரோஸ்கார்டன் தென்றல் நகரை சேர்ந்த சசிரேகா (வயது 29) என்ற பெண் மீதும் மோதியது.



இந்த விபத்தில், சசிரேகா பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜய் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் போலீசார், காரை ஓட்டி வந்த விஷ்ணுவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கார் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதி சாலை ஓரத்தில் இருந்த புதருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...