பிரபாகரன் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி..! - சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேச்சு

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று ஈரோட்டில் மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு.



ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது.

ஒன்றிய அரசின் 2023-24 நிதி நிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை காப்பதற்கான அறிக்கையாகும். இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அறிக்கையாகும். 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை முதல் எம்.பி. சுப்புராயனும், நானும் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

மேலும் மகாத்மா காந்தி திட்டத்திற்கு நிதி குறைப்பை கண்டித்து வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி அனைத்து இடங்களிலும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும். தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் போடப்படுவதாக இருந்தால் எதிர்ப்போம். இல்லாததை சொல்லி எடப்பாடி பழனிசாமி பிரச்னைகளை திசை திருப்ப முயல்கிறார். திமுக-வில் உள்ள தோழமை கட்சிகளும், இடது சாரி கட்சிகளும் திமுக செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவில்லை, வாய்மூடி மவுனியாக இருப்பதாக எடப்பாடி சொல்கிறார். அவர் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவரும், அவருடைய கட்சியும் வாய்மூடி மவுனியாகத்தான் இருக்கிறது.

பா.ஜ.க.வின் கொத்தடிமையாக அதிமுக மற்றும் எடப்பாடி இருக்கிறார். வேட்பாளரையே பா.ஜ.க.வை கேட்டுத் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது. இப்படிப்பட்டவர் எங்களை பற்றி விமர்சிக்க உரிமை இல்லை.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...