உடுமலை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் மோதல் - பயணிகள் அவதி

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.


திருப்பூர்: உடுமலை பேருந்து நிலையத்தில், ஓட்டுநர்கள் மோதிக் கொண்டதால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வரமுடியாமல் இடையூறு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், பெதப்பம்பட்டி, பொள்ளாச்சி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பேருந்து புறப்படும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேரம் தவறி புறப்படுவதால் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், பெதப்பம்பட்டி செல்ல நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் டைமிங் பிரச்சினை காரணமாக மோதிக்கொண்டனர். இதனால் பேருந்தை எடுக்க தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர்.



இதன்காரணமாக, மற்ற பேருந்துகளும் நிலையத்துக்குள் வருவதில் இடையூறு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடையே சரமசம் ஏற்பட்டதால் அங்கிருந்து சென்று விட்டனர். எனவே, பேருந்து நிலையத்தில் போலீசாரை நியமித்து கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...