கோவையில் கல்குவாரிகளுக்கு மறுஅனுமதி வழங்குவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் - அனுமதி வழங்க மக்கள் ஒப்புதல்

கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் 9 கல்குவாரிகளுக்கு மறுஅனுமதி வழங்குவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் மறுஅனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செயல்பட்டு வரும் 9 கல்குவாரிகளுக்கு மறு அனுமதி வழங்கலாம் என கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 9 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி கால அவகாசம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதற்காக அந்த கல்குவாரிகள் சார்பில் மறு அனுமதி கோரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.



இந்நிலையில், 9 கல்குவாரிகளுக்கும் மறு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கிணத்துக்கடவு - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.



மாவட்ட வருவாய் அதிகாரி செல்விசுரபி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.



இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



தற்போது இயங்கி வரும் கல்குவாரிகளால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை, இந்த கல்குவாரிகளால் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது என்றும், எனவே கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கலாம் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.



மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன், தற்போது இயங்கி வரும் கல்குவாரிகளை முறையாக ஆய்வு செய்து அரசு சட்ட திட்டங்களை முறைப்படுத்தி பிறகு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் எதிர்ப்பு தெரிவிக்காததால் கல்குவாரிகள் இயக்க அனுமதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...