கோவை அருகே புதிய நியாயவிலைக் கடை திறப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு!

கோவை மாவட்டம் கோவிந்தன்நாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்துவைத்தார்.


கோவை: கோவை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தநாயக்கன்பாளையத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டது.



இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். பேரூராட்சித்தலைவர் ஜெனார்த்தனன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் விமல்ராஜ், கூட்டுறவு இணை பதிவாளர் உமாகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று இந்த ரேசன் கடை கோவிந்தநாயக்கன்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

காலை 8 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் முழு நேர ரேசன்கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணைய் வகைகள், பருப்பு வகைகள் மற்றும் டீ தூள் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...