தம்பியை மீட்பதற்காக குளத்தில் குதித்த 8ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி - கோவை தொண்டாமுத்தூர் அருகே சோகம்!

கோவை தொண்டாமுத்தூர் அருகே குளத்தில் வழுக்கி விழுந்த தம்பியை மீட்க முயன்ற 8-ம் வகுப்பு மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூரை அடுத்த வேடபட்டியை சேர்ந்தவர் மரிய ஜான்சன். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஜார்ஜ் டேனியல், கேரல் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஜார்ஜ் டானியல் சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

விடுமுறை தினமான நேற்று மரிய ஜான்சன் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு வேடப்பட்டி புதுக்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, இளைய மகன் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். தம்பியை மீட்பதற்காக ஜார்ஜ் டேனியல் குளத்திற்குள் குதித்துள்ளார். அப்போது, ஜார்ஜ் டேனியலும் நீரிலும் நீருக்குள் மூழ்கினார்.

உடனடியாக தந்தை மரிய ஜான்சன் நீரில் மூழ்கிய இரு மகன்களையும் மீட்டார். அப்போது மூத்த மகன் ஜார்ஜ் டேனியல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உதவியோடு ஜார்ஜ் டேனியலை கோவை அரசு மருத்துவமனைக்கு மரியஜான்சன் கொண்டுசென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஜார்ஜ் டேனியல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...