கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முகாம் - பொதுமக்கள் அச்சம்!

கோத்தகிரி அடுத்த கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன.

இதில் கோழிக்கரை பழங்குடியின கிராமத்தின் சாலையை மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் பிரதான சாலையாக தங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் சாலையோர காப்பி, தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.



இதன் காரணமாக வனத்துறையினர் அப்பகுதியில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு, குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...