கோவை கவுண்டம்பாளையம் அருகே கல்பனா தியேட்டர் முன்புறம் சாலையில் நின்றிருந்த ஹரிகிருஷ்ணனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய போடியை சேர்ந்த யோகேஷ் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நின்றிருந்த நபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் தற்போது கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவர், கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் முன்புறம் நின்றிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த போடியைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் ஹரிகிருஷ்ணனை கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது குறித்து ஹரி கிருஷ்ணன் துடியலூர் காவல் நிலையத்தில் யோகேஷ் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற யோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.