உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள சீனிவாச ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுடன் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் அமைந்துள்ள சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 2 ம் தேதி தொடங்கியது.

இதனை தொடர்ந்து அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு கணபதி பூஜை புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும் காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம் மண்டபார்ச்சனை யாகசாலை பிரவேசம் வேத பாராயணம் முதற்கால பூஜை ஹோமங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று காலை 5 மணிக்கு பிரதிஷ்டை ஹோமங்கள் நடத்தப்பட்டு, காலை 7.30 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் உடுமலை மத்வ சேவா அமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.