கோவை மதுக்கரையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் - கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரோந்து தனிப்படை காவல்துறையினர் சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பின்னர் இருவரிடமும் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது22), என்பதும், தற்போது காந்திபுரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து வந்ததும், மற்றொரு இளைஞர் சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பூவேந்தன் (வயது21), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.



இருவரும் ரயில் மூலம் ஆந்திரா மாநிலத்துக்கு சென்று 10 கிலோ கஞ்சா வாங்கி வந்து, அதில் 4 கிலோ கஞ்சாவை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படையினர, அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவைவும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...