தாராபுரம் அருகே பழனிக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

தாராபுரம் அருகே காங்கேயம் பிரிவு அருகே மினி டெம்போ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனிக்குச் சென்ற பாதயாத்திரை பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.



திருப்பூர்: பழனிக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருடன் அப்பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் பழனிக்குப் பாதயாத்திரையாகச் சென்று விட்டு 19ஆம் தேதி மினி டெம்போவில் எடப்பாடி செல்ல தாராபுரம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சௌந்தர்ராஜன் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.



காங்கேயத்திலிருந்து தாராபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து காங்கேயம் பிரிவு அருகே வந்த போது, மினி டெம்போ மீது மோதியது. இதில் சௌந்தர்ராஜன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.



உடன் வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...