உடுமலை தீயணைப்பு நிலையம் மேம்படுத்தப்படுமா? - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீயணைப்பு நிலையத்தை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு நிலையம் 1931 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான தீயணைப்பு நிலையம் ஆகும். உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுக்காவில் 72 ஊராட்சிகள் ஐந்து பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என அனைத்தும் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இரு தாலுக்காவிலும் நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், தீவன தொழிற்சாலைகள், காற்றாலைகள் என பல்வேறு வகையான தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன. அதேபோல, கரும்பு, மக்காசோளம் என தீ விபத்தால் பாதிக்கும் விவசாய சாகுபடியும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.



திண்டுக்கல் கோவை இரு மாவட்ட எல்லை வரை உடுமலை தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது. தற்பொழுது, உடுமலை தீயணைப்பு நிலையத்தில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது. அதுவும் பழைய வாகனமாக உள்ளதால் அடிக்கடி பழுதும் ஏற்பட்டுவிடுவதாகக் கூறப்படுகிறது.



மேலும் நீர் நிலைகள் அதிகம் உள்ளதால், மழை, வெள்ளக் காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்கான பைபர் படகுகள், கயிறு, மரம் அறுக்கும் இயந்திரம் என கூடுதல் வசதிகளை வழங்கி தீயணைப்பு நிலையத்தை மேம்படுத்துவதோடு, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் , கூடுதல் தீயணைப்பு வீரர்களையும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...