கிணத்துக்கடவு அருகே விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிணத்துக்கடவு அடுத்த கோவில்பாளையம் அருகே கடந்த 28ஆம் தேதி நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்த கனகராஜ் என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில்பாளையம் அடுத்த செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (68). இவரும் கோவை பி.என்.புதூர் பகுதி சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோர் கடந்த 28 ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் கோவை பொள்ளாச்சி சாலையில் சென்றுள்ளனர்.

அப்போது கோவில்பாளையம் அருகே சென்ற நிலையில், கனகராஜ் வளைவில் திரும்பிய போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் பலத்த காயமடைந்த கனகராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கனகராஜ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...