இம்மாத இறுதிக்குள் ரூ.250 கோடி வரி வசூலிக்க இலக்கு - கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம் எனவும், வரி வசூல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தகவல்.


கோவை: கோவை மாநகராட்சியின் 5 மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சேமிப்பு நிதியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.19.84 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளார்.



கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.



இதில் கோவை மாநகராட்சியின் 5 மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சேமிப்பு நிதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.19.84 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசுகையில், கோவை மாநகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ரூ.250 கோடி வரி வசூல் இலக்கை எட்டிவிடுவோம். ஒரே மாதத்தில் ரூ.30 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கடந்த 2 நாட்களில் ரூ.4.50 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.50 கோடி நிதி விரைவில் மாநகராட்சிக்கு வர உள்ளது. சாலைப் பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசுகையில்,மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். வளர்ச்சி பணிகள் தரமானதாகவும், விரைவாக மேற்கொள்ளப்படும். மாமன்ற உறுப்பினர்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்றித்தரப்படும்," என்றார்.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில்,டைட்டல் பார்க் பகுதிகளைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

26ஆவது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில்,கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பொருளாதார பாடத்திட்டத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளியாக இருக்கும் காரணத்தால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகவே உடனடியாக அனைத்து பாடத்திட்டங்களுக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கோவை மாநகராட்சி அனைத்து பொதுக் கழிப்பிடங்களும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜன.10 ஆம் தேதி வரை சுத்தம் செய்யப்படாமல் புதிய ஒப்பந்ததாரர் யார் என்று தெரியாமல் பழைய ஒப்பந்ததாரர் பணிக்கு வராமலும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில், புதிய ஒப்பந்ததாரர் பணியைத் துவங்குவதற்கு வரும் வரை பழைய ஒப்பந்ததாரர் முழுமையாக இருந்து பொதுமக்களுக்குச் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



இக்கூட்டத்தில் துணை கமிஷனர் ஷர்மிளா, மண்டல அளவிலான அனைத்து துறை அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...