சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு - கோவை மாநகர போலீசார் பிரச்சாரம்

சைபர் கிரைம் மோசடிகள் குறித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சைபர் கிரைம் மோசடிகள் குறித்து மக்களிடையே கோவை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண்ணை பெற்று பணத்தை திருடுதல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

அதேபோல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நமது சொந்த தகவல்களை திருடி அதன் மூலம் மிரட்டி பணம் பறித்தல், மொபைல் ஆப் மூலம் கடன் தருவதாக கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோட்டீஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இம்மாதிரி இணையதள மோசடி மூலம் பணத்தை பொதுமக்கள் இழந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசை அணுகினால் இழந்த பணத்தை மீட்க முடியும்.

எனவே இணையதளத்தை அதிகளவு பயன்படுத்தும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...