உடுமலையில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்படுமா? - ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


உடுமலை: உடுமலையில் உள்ள ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில் நிலையம் அமைந்தள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச் செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்த புரம் - மதுரை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.



உடுமலை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். ஆனால், ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்கும், முன்பதிவு செய்வதற்கும் என ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், அவசரமாக வரும் ரயில் பயணிகள் விரைந்து டிக்கெட் எடுக்க முடிவதில்லை. மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் விரைந்து டிக்கெட்டுகளை கொடுக்க முடியாத நிலை அதிகாரிகளுக்கும் ஏற்படுகிறது. இதனால், காலவிரையம் ஆவதோடு, பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகுகிறது.

எனவே, பயணிகளின் நலன்கருதி, உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் அமைக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...