மூக்கூடல் கிராமத்தில் ஸ்ரீ உச்சி மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உடுமலை அருகே மூக்கூடல் ஜல்லிபட்டியில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோயில் கோவில் கும்பாபிஷேக விழாவை வள்ளி கும்மியாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


திருப்பூர்: மூக்கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ உச்சி மகாளியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூக்கூடல் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சி மகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று சிவஸ்ரீ அருண்கேசவ் சிவாச்சியர், சிவஸ்ரீ சிவசங்கர் சர்மா தலைமையில் நடைபெற்றது.



புண்ணிய தளங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாகக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்குத் தண்ணீர் ஊற்றப்பட்டது.



பின்னர் கோபுரங்களுக்கு தீபாரதனை காட்டிய பின் பொதுமக்களுக்குப் புனித நீர், பூ விசபட்டது.



கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் மாலை முக்கிய பாரம்பரியமான வள்ளிகும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



500-க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் ஒன்றுகூடி பாரம்பரியமான பாடல்கள், நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வள்ளி கும்மியாட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...