மேட்டுப்பாளையத்தில் கோழியால் வந்த சண்டை - பெண் தற்கொலை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கோழியால் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையால், மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேட்டுப்பாளையம்: கோழியால் ஏற்பட்ட பிரச்சினையில் பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் டெய்சி. குடும்பத்துடன் அங்கு வசித்து வரும் டெய்சி, வீட்டில் கோழிகளை வளர்த்துவந்துள்ளார்.

இந்தநிலையில், டெய்சியின் கோழி வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டிருந்தபோது, சிறுவர்கள் அங்கு விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது, டெய்சி தள்ளி சென்று விளையாடுமாறு அந்தச் சிறுவர்களைக் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ள சிலருடன் டெய்சிக்கு பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.



இரு தரப்பிடையே தகராறு முற்றிய நிலையில், பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் டெய்சியை தாக்கியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த டெய்சி தனது வீட்டினுள் சென்று வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குத்தானே கொழுத்திக் கொண்டார். இதில் படுகாயமடைந்த டெய்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு கோழி பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் பெண் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரமடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...