கோவை மாநகராட்சியில் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற குடியரசு தினவிழாவில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்‌.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற குடியரசு தினவிழாவில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ காந்தியடிகளின்‌ திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்‌.



பின்னர், மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ காந்தியடிகளின்‌ திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சியில்‌ சிறந்த முறையில்‌ பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களை மேயர்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.



அடுத்ததாக மாநகராட்சியில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டுக்கான மாமன்ற உறுப்பினர்கள்‌ பொதுமக்களுக்கு ஆற்றிவரும்‌ சேவைகளின்‌ அடிப்படையில்‌ சிறப்பாக சேவையாற்றிய மாமன்ற உறுப்பினர்களை பாராட்டி விருதுகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ஆகியோர்‌ வழங்கினர்.



இதேபோல் மாநகராட்சியில்‌ 25 ஆண்டுகள்‌ சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு வெகுமதி மற்றும்‌ நற்சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.



இறுதியாக குடியரசு தினவிழாவில்‌ மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...