கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சியில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.

அடுத்ததாக மாநகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளின் அடிப்படையில் சிறப்பாக சேவையாற்றிய மாமன்ற உறுப்பினர்களை பாராட்டி விருதுகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்ஆகியோர் வழங்கினர்.

இதேபோல் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினார்கள்.

இறுதியாக குடியரசு தினவிழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.