திருப்பூரில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் - விபத்தில் கல்லூரி மாணவி பலி

திருப்பூரில் மது போதையில் ஷேர்ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார். பொதுமக்களிடம் வசமாகச் சிக்கிக் கொண்டதால் மயக்கம் வந்தது போல் நாடகமாடிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கைது.



திருப்பூர்: மதுபோதையில் ஷேர் ஆட்டோவை இயங்கிய போது ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி பலியானார்.

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்-சங்காயி தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் ஜனனி, சிக்கண்ணா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன், ஆட்டோ ஓட்டுநர் குணசேகரன் என்பவரின் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

ஹவுசிங் யூனிட் என்ற இடத்தில் ஆட்டோ சென்றபோது, எதிரே போட்டிப் போட்டுக் கொண்டு வந்த மூன்று ஆட்டோக்களில் ஒரு ஷேர் ஆட்டோ, குணசேகரனின் ஆட்டோ மீது மோதியது. இதில் இரண்டு ஆட்டோக்களும் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த நான்கு பேரும் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய கல்லூரி மாணவி ஜனனி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய ஷேர் ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் விசாரிக்கையில், அவர் குடிபோதையில் ஆட்டோவை போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்டோவை ஓட்டியது தெரியவந்தது.



இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாகத் தாக்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருப்பூர் பூத்தார் தியேட்டர் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சின்ன துரையை கைது செய்து திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

குடிபோதையில் ஷேர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி, கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...