திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டம்

திருப்பூரில் மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.



திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு ரூபாய் 21,000 குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, ஊர்வலமாக சென்ற ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர், தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...