வாடகை விவகாரம் - வால்பாறை டாஸ்மாக் கடை உட்பட 40 கடைகளுக்கு சீல்

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத காரணத்தால், டாஸ்மாக் கடை உட்பட 40 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு கடை அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை நகராட்சி கடைகளுக்கு வாடகை மாதம் தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம், கடைகளுக்கான வாடகை உயர்த்தியதால் கடைக்காரர்கள் வாடகை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.



நகராட்சி நிர்வாகம் பலமுறை வாடகை கட்டுவதற்கு நோட்டீஸ் கொடுத்தும் கடை உரிமையாளர்கள் வாடகை கட்டாததால், நீண்ட நாள் கடை வாடகை கட்டாமல் இருந்த 40 கடைகள் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டன.



அரசு மதுபான கடை உட்பட 40 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...