வைக்கம் பெரியார் நினைவ புனரமைப்புப் பணிகள் - கேரளாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆய்வு!

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.


கோவை: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில், தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட வெற்றியை நினைவு கூறும் 70 சென்ட் பரப்பளவில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நினைவகமானது, 66.09 சதுர மீட்டர் அருங்காட்சியக கட்டிடமும், 84.20 சதுர மீட்டர் நூலக கட்டிடமும், சிறுவர் விளையாட்டு பூங்காவும், இரு பாலருக்கான கழிவறை கட்டிடமும், வளாகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் ஆகியவற்றுடன் அமையப் பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் அமர்ந்த நிலையில் உள்ள திருவுருவச் சிலையும் இடம்பெற்றுள்ளது.



தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக திகழும் இந்நினைவகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள், பெரியாரைச் சந்தித்த தலைவர்கள் ஆகிய புகைப்படங்களும் தமிழ்,மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரியார் பங்கேற்ற போராட்டங்கள் மற்றும் ஆற்றிய பணிகள் குறித்த தொகுப்பும் இடம்பெற்றுள்ளன.



தந்தை பெரியாரின் பிறந்த நாளை (செப்டம்பர்- 17) சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததை அடுத்து, இந்நினைவகத்தில் கேரளா அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு சமூக நீதிநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



இதனை தொடர்ந்து, 1984 ஆம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ஆம் வருடத்தில் திறப்பு விழா செய்யப்பட்ட இந்நினைவகத்தினை புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில், இந்நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலருக்கு அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...